சிறப்பு எடுப்பு உரிமைகள் உள்ளடக்கமானது (Special Drawing Rights basket) 5 வருடங்களுக்கு ஒருமுறை அல்லது தேவைப்படின் அதற்கு முன்போ மறு ஆய்வு செய்யப் படுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தினால் மேற்கொள்ளப் படும் புதிய SDRன் பொது ஒதுக்கீட்டை இந்தியா ஆதரிக்கவில்லை.
புதிய SDR (Special Drawing Rights) ஒதுக்கீடானது எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் புதிய அந்நியச் செலாவணி இருப்புகளுடன் அனைத்து 189 நாடுகளுக்கும் வழங்கப் படுகின்றது.
SDR பற்றி
SDR என்பது சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பு நாடுகளின் அலுவல்பூர்வ நிதி இருப்புகளுக்கு ஆதரவளிப்பதற்காக 1969 ஆம் ஆண்டில் சர்வதேச நாணய நிதியத்தினால் உருவாக்கப் பட்ட ஒரு சர்வதேச நிதி இருப்புச் சொத்தாகும்.
SDRன் மதிப்பானது அமெரிக்க டாலர், யூரோ, சீனாவின் ரென்மின்பி, ஜப்பானின் யென் மற்றும் பிரிட்டனின் பவுண்டு ஸ்டெர்லிங் ஆகிய 5 நாணயங்களைக் கொண்ட உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.
SDR ஆனது IMF-ன் சார்பாகவும் இதர சர்வதேச அமைப்புகளின் சார்பாகவும் ஒரு அலகாகச் செயல்படுகின்றது.
SDR என்பது ஒரு நாணயமோ அல்லது IMF மீதான உரிமைக் கோரிக்கையோ அல்ல.
ஆனால், IMF உறுப்பு நாடுகளால் தடையின்றிப் பயன்படுத்தப்படும் நாணயங்கள் மீதான ஒரு சாத்தியமுள்ள உரிமைக் கோரிக்கையாகும்.